Posts

Showing posts from November, 2024

தனிமனித வாழ்வும் செயற்கை நுண்ணறிவும்

Image
துயில் எழ காலையில் தூண்டும் நுண்தூது  பல் துலக்க வில்லை துலக்குகிறோம் திரையை  கழிவரையிலும் கைப்பேசி - நம்  வாழ்க்கை போக்கை யோசி  உணவருந்த தவறுகிறோம் மின்னூட்ட தவறுவதில்லை  திறன் பார்க்கும் நிறுவனங்கள் திறனற்று போகும் தலைமுறைகள்  மாற்று வேலைக்கு நுண்ணறிவு  மனித உழைப்புக்கு பெரும் இழிவு  குழந்தைக்கு உணவூட்ட, தாலாட்ட சீராட்ட, விளையாட கற்பித்திட, கவனித்திட கண்டித்திட  வந்தது நுண்ணறிவு நூதனம்  மாறியது நூல் அறிவு சாதனம்  விண்ணை ஆராய உதவுதே  மண்ணின் துன்பத்தை மறைக்குதே  வளர்ச்சிக்கு உதவா எவ்வரிவும் வேண்டா - என் வாழ்க்கைக்கு  படைப்பின் சிகரமே நான் - பட்ட  அடிகள் என் வளர்ச்சிக்கு  மெய்யறிவு என்னறிவு - தரும்  நுண்ணறிவு பொய் அறிவு - என்றாலும்  கட்டாயம்! இது காலத்தின் கட்டாயம்!  கற்றுக் கொள்ள வேண்டும் இக்காற்றுடன் குடும்பம் நடத்த.. சகோ. ஆரோக்கிய அபினேஷ் மதுரை உயர்மறைமாவட்டம்