காலம் கடந்தது ஏனோ!
காலம் கடந்தது ஏனோ! அன்பு என்னும் அன்னை அரவணைத்த காலம் போய் ஆன்லைன் மோகம் என்று காலம் கடந்தது ஏனோ! ஆசைகள் பல இருந்தும் தன்னிலை உணர்ந்த காலம் போய் இன்னும் இன்னும் என்று காலம் கடந்தது ஏனோ! இமை மூடும் வேளையில் ஈராயிரம் கனவுகள் கண்ட காலம் போய் ஈடு செய்வது இன்ஸ்டாதான் என்று காலம் கடந்தது ஏனோ ! ஈட்டி என பாய்ந்து வேலை செய்த காலம் போய் உறவின்றி ஊதாரியாய் உணர்ந்து காலம் கடந்தது ஏனோ! ஊட்டம் நிறைந்த உணவை வீட்டில் உண்ட காலம் போய் ஏங்கும் உணவை எவனோ ஒருவன் எடுத்துவரும் காலம் கடந்தது ஏனோ! ஏழறிவும் உண்டு என விஞ்ஞானம் கூறிய காலம் போய் AI -ல் தான் இவையெல்லாம் உண்டு என்று காலம் கடந்தது ஏனோ! ஐந்திணையையும் ஆண்டவன் மனிதன் என்ற காலம் போய் ஒட்டுமொத்தமாய் ஒரே விஞ்ஞானத்தில் அடக்கம் என்று காலம் கடந்தது ஏனோ! ஓடும் நதியென கடந்த நிகழ்வை நினைவில் கொண்ட காலம் போய் காலத்தின் ஓட்டத்தில் வாழ்வும் கனவானது என காலம் கடந்தது ஏனோ! கடந்ததை திரும்பி பார்ப்போம் கடந்தவை...