Posts

Showing posts from March, 2025

அஞ்சாதே.... மத்தேயு 10:28

Image
  அஞ்சாதே.... மத்தேயு 10:28  செயற்கை நுண்ணறிவு பற்றி ஏன் அச்சம் கொள்ள வேண்டும் அது ஒரு இயந்திரம் மட்டுமே என்று நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு என்பது கடவுள் அல்ல அது ஒரு இயந்திரம்தான் என்று அறிந்திருக்கின்ற நாம் ஏன் அதைப்பற்றி அச்சம் கொள்ள வேண்டும். இவ்வுலகில் உள்ள அனைத்திலும் நன்மைகள் தீமைகள் நிறைந்து இருக்கின்றன. மனிதராகிய நாம் எதை தேர்ந்தெடுத்தோம் என்பதில் தான் உள்ளது நன்மையும் ஆபத்தும். ஏனெனில் இறைவன் இவ்வுலகை படைக்கும் போது வாழ்வின் மரத்தையும் அது நடுவில் படைத்தார் என்று நாம் திருவிவிலியத்தில் காண்கின்றோம். இறைவன் மனிதனைப் படைத்து இவ்வுலகில் உள்ள அனைத்தையும் நீங்கள் பயன்படுத்துங்கள் ஆனால் இந்த வாழ்வின் மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்று கட்டளை இட்டார். இதன் வழியாக அவர் நமக்கு அளித்த உரிமையும் சுதந்திரத்தையும் நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால் மனிதன் தனது சுதந்திரத்தை கடவுளுக்கு எதிராக பயன்படுத்தி வாழ்வின் மரத்தின் கனியை உண்கின்றான் தனது வாழ்வை இழக்கின்றான். இதைப் போன்று தான் இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு என்பது தவிர்க்க முடியாத நிலை இருந்தாலும்...