AI vs Priesthood
செயற்கை நுண்ணறிவியால் குருத்துவத்தை ஈடு செயய முடியுமா?
செயற்கை நுண்ணறிவே நீ என்ன கடவுளின் உருவா சாயலா?
இல்லை நீ சுவாசிப்பது இறைவனின் மூச்சிலா?
இறைமகனையும் சிலுவையில் ஏற்ற உன்னால் பாவம் செய்ய இயலுமா?
மரணத்தை வென்று இறைவன் உன்னிடமா வந்தான்?
பெண்ணுக்குத் தாய்மையைத் தர உண்ணால் முடியுமா?
ஆணைத் தந்தையாக நீ மாற்றுவாயா?
இறைவன் வதனத்தை மண்ணில் மலரச் செய்யும்
மழலையின் சிறிப்பாய் நீ ஒலிப்பாயா?
செயற்கை நுண்ணறிவியே நீ காதலித்ததுண்டா?
காதல் தரும் நரகசுக வலிகளை உன்னால் ஏற்படுத்த முடியுமா?
அன்பு முத்தங்களின் ஈரத்தையும் ஆரத் தழுவுதலின் வெப்பத்தையும்
உன்னால் கொடுக்க இயலுமா?
புன்னகையின் அழகை நீ கண்டதுண்டா?
கண்ணீரின் எடையை நீ சுமந்திருக்கிறாயா?
மனம் வெதும்பி அழும்போது தாயின் மடி நீயாவாயா?
என்னை எப்பொழுதும் நேசிக்கும் எனது தந்தையினுள்ள ம் உனதுள்ளமா?
நண்பனாய் ஆற்றவும் தோழனாய்த் தேற்றவும் உனக்குத் தெரியுமா?
அன்பால் கண்டிக்க நீ என் ஆசானா?
இறைவன் உறையும் இயற்கை உனது வீடா?
இறந்தபின் விண் செல்ல விண்ணகம் என்ன உனது தாய் நாடா?
உயிரற்ற உன்னையும் இறைவன் அன்பு செய்கிறான் அவனை நீ அன்பு செய்கிறாயா?
அவனை அவன் நிலை மறக்கச் செய்ய உனக்கு செபிக்கத் தெரியுமா?
மனிதப் படைப்பு எவ்வளவு மகத்தானதாய் இருந்திருந்தால்
இறைவன் மனிதனாய் பிறந்திருப்பான்!
எனக்காக ஒவ்வொரு நாளும் நீயா பலியாகிறாய்?
பலிப்பொருளாய் உன்னையே நீ படைக்க உன்னால் முடியாதன்றோ !
சகோ. ஜார்ஜ் வில்லியம்ஸ்

Comments
Post a Comment